அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
அலை அலையாய்ச் சபரிமலை நோக்கிப் பக்தர்கள் பயணிப்பதும், அவ்வப்போது[அடிக்கடி?] வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, சிலரோ பலரோ மரணத்தைத் தழுவுவதும் வழக்கமாகிவிட்ட நிகழ்வாகும்.
காரணம், அவர்கள் ஐயப்பனின் பிறப்பு குறித்து அறிந்துகொள்ளாமலோ, அது குறித்துச் சிந்திக்காமலோ இருப்பதுதான்.
கதை தெரிந்தால் அவர்களில் சிலரேனும் திருந்துவார்கள் என்னும் நப்பாசையில் அது இங்குப் பதிவு செய்யப்படுகிறது[கதை தெரிந்தும் சிந்தித்துத் திருந்தாத செம்மறிக் கூட்டம் நமக்கு ஒரு பொருட்டல்ல].
கதை:
அரக்கன் ஒருவன்[பஸ்மாசுரன்] சிவபெருமானை வழிபட்டு ஆண்டுக்கணக்கில் தவம் இருந்தான்.
தவத்தை மெச்சிய அப்பாவிப் பரமசிவன், “நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்று சொல்ல, “நான் யார் தலையில் கை வைத்தாலும் அது வெடித்துச் சிதற வேண்டும்” என்று அவன் கோரிக்கை வைக்க, இந்தச் சாமியும் அந்த வரத்தைக் கொடுக்க, சோதித்துப் பார்க்கிறேன்” என்று சொல்லி, இவரின் தலையில் கைவைக்க முயன்றான் அரக்கன்.
தன் தவற்றைத் தாமதமாகப் புரிந்துகொண்ட இவர் தன் உயிரைக் காத்துக்கொள்ள அண்டவெளியில் ஓடுகிறார். அரக்கன் விரட்டுகிறான். அவர் அயராமல் ஓடுகிறார். அரக்கன் விடாமல் துரத்துகிறான்.
இந்த இருவரின் ஓட்டத்தால் அண்டவெளியே அதிருகிறது.
இந்த அவல நிகழ்வைத் தேவலோகத்திலிருந்து வேடிக்கை பார்த்த முப்பத்து முக்கோடித் தேவர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் விஷ்ணு பகவானைத் தேடிப்போய் சிவனைக் காப்பாற்றுமாறு முறையிடுகிறார்கள்.
காக்கும் கடவுளான விஷ்ணுக் கடவுள் பேரழகியாக[மோகினி] வடிவெடுத்து, சிவனை விரட்டிச் செல்லும் அரக்கன் முன் தோன்றி, கவர்ச்சி காட்டி நடனமாடினார்[ள்]
மோகினியை மோகித்த அரக்கன் கட்டுக்கடங்காத காம வெறியுடன் அவளைத் தழுவிச் சுகம் காண முற்பட்டபோது, “உன் உடம்பு நாறுகிறது, அழுக்குப்போக நீராடிவிட்டு என்னுடன் சல்லாபிக்க வா” என்று மோகினி சொல்ல, புத்தி கெட்ட அந்தப் பொல்லாத அரக்கன் நீர்நிலையைத் தேடுகிறான்; எதுவும் தென்படவில்லை[மாயவன் விஷ்ணு நிகழ்த்திய மாயாஜாலம் அது].
அரக்கன் அது குறித்து மோகினியிடம் முறையிட, அவளு[ரு]ம், “குளிக்காவிட்டால் பரவாயில்லை. கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் தலையில் தடவி வா என்று சொன்னதோடு, சிறிது தொலைவில் கையளவுக் குழியில் கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரைத் தேக்கிவைத்தாள்[ர்].
மாயவன் செய்த சூது அறியாத அந்தக் காமுகன் கையளவு நீரை அள்ளித் தன் தலையில் தேய்க்க அவன் தலை வெடித்துச் சிதறியது[மாறுபட்ட நிகழ்வுகளுடனான கதைகளும் உள்ளன].
இதற்குப் பிறகுதான் அந்த அசிங்கம் அரங்கேறியது.
விஷ்ணு நடத்திய லீலையை, மறைந்திருந்து மனம் பதறப் பார்த்துக்கொண்டிருந்த பரமேஸ்வரக் கடவுள், அழகி மோகினி உருவில் இருப்பவர் சக கடவுளான விஷ்ணு என்பதை மறந்து அவரைக் கட்டித்தழுவி உடலுறவு கொண்டார்[ஆனானப்பட்ட முழுமுதல் கடவுளாலேயே காமத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அடக்கடவுளே!]; அய்யப்பன் பிறந்தார்[//மோகினி அவதாரத்தினை விஷ்ணு மீண்டும் எடுத்தார். அத்துடன் ஒரு வனத்தில் சென்று மறைந்தார். மோகினியைக் காணச் சென்ற சிவபெருமான் வனத்தின் ஒரு மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த மோகினியைக் கண்டார். அவருக்கு மோகம் வந்தது. உடனிருக்கும் பார்வதியை மறந்து மோகினியை அடைய எண்ணினார்;மோகினியுடன் அவர்[சிவன்] உடலுறவு கொண்டார். அவர்களுக்குப் பிறந்தவரே ஐயப்பன் ஆவார்//[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF]
//திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் பிரச்சினையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில், ‘விசிக எம்எல்ஏ’ தமிமுன் அன்சாரி, மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது என்றும், எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்; காவி இருக்கக் கூடாது என்றும் ‘கடுமையாக’ விமர்சித்துள்ளார்// என்கிறது ஊடகச் செய்தி*
இந்தக் கடுமையான விமர்சனத்திற்கு 'நீதிப் பேரரசர்' ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆற்றவுள்ள எதிர்வினை என்னவாக இருக்கும்?
என்னவாகவோ இருக்கட்டும். அதை அறியும் ஆர்வம் அடியேனுக்கு உள்ளது எனினும், தமிமுன் அன்சாரியின் அற்புதமான கவிநயம் மிளிரும் அந்தக் கற்கண்டு நடைத் தமிழை வெகுவாக ரசித்தேன்; மகிழ்ந்தேன்.
மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத் தூண்டும் அந்த வாசகம்;
“மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது. எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்! காவி இருக்கக் கூடாது.”